என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தாய்லாந்து குகை
நீங்கள் தேடியது "தாய்லாந்து குகை"
தாய்லாந்தில் உயிரை பணயம் வைத்து நடத்தப்பட்ட குகை மீட்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு ரூ.400 கோடி செலவில் திரைப்படம் தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாராகி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue #ThaiCaveHollywoodMovie
தாய்லாந்தின் தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மிகவும் சவாலான இந்த மீட்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த தாய்லாந்து கடற்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை மீட்பு சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் ஹாலிவுட் நிறுவனம் இதை 400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார். அவர் தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.
தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue
பாங்காக்:
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.
இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue #Thailandcave #ThailandCaveKids #ThaiNavySEAL
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.
கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.
அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue #Thailandcave #ThailandCaveKids #ThaiNavySEAL
தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாங்காக்:
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.
கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.
இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு குகைக்கு வெளியே அழைத்து வந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #ThaiCaveRescue

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். #ThaiCaveRescue
பாங்காக்:
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. மீட்ப்புப்பணியில் சிறப்பான முன்னேற்றமாக 13 பேரில் 4 மாணவர்கள் நேற்று மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் அவர்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர். #ThaiCave #FIFA
சியாங்ராய்:
தாய்லாந்து குகையில் வெள்ளப்பெருக்குக்கு இடையே சிக்கி உள்ள 12 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்கான பணியில் அந்த நாட்டின் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், போலீசார், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குகையின் வெள்ளத்தை வடியச்செய்வதற்கான பணியில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர். அந்தக் கடிதங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
போங் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிற சிறுவன் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், “என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்திரமாக இருக்கிறேன்” என கூறி உள்ளான்.
இன்னொரு சிறுவன், “அம்மா, அப்பா, உடன்பிறப்புகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நான் வெளியே வந்த பின்னர் அம்மா, அப்பா எனக்கு சாப்பிட மூகாத்தா விருந்து (திறந்தவெளி விருந்து) வேண்டும்” என்று கேட்டு இருக்கிறான்.
சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எக்காபொல் சாண்டாவோங், சிறுவர்களை குகைக்கு அழைத்துச்சென்றதற்கு மன்னிப்பு கேட்டு அவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “அன்பான சிறுவர்களின் பெற்றோரே, அவர்கள் எல்லாரும் நலமாக உள்ளனர். நான் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வேன். என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமுடன் கூறி உள்ளார்.
இதேபோன்று பயிற்சியாளர் எக்காபொலுக்கு சிறுவர்களின் பெற்றோரும் கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், அவர்மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு நன்றி என்றும் தெரிவித்து உள்ளனர்.
மாகாண கவர்னர் நாரோங்சாக் கூறும்போது, “சிறுவர்கள் நல்ல பலத்துடன் உள்ளனர். ஆனாலும் நீந்த முடியாது. அவர்களுக்கு முக்குளிப்பு மற்றும் சுவாச பயிற்சிகள் தரப்படுகின்றன” என்று குறிப்பிட்டார். #ThaiCave #FIFA #Tamilnews

தாய்லாந்தில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. #ThaiCaveRescue
பாங்காக்:
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
மீட்பு பணி வீரர் உயிரிழந்ததன் மூலம் அந்தக் குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான அளவில் குறைந்து வருவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை கரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது என்று சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்தார். #ThaiCaveRescue
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில், அப்பகுதியில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை கரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது என்று சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்தார். #ThaiCaveRescue
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள மாணவர்கள் விரைவில் மீட்கப்பட்டுவிட்டால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பைனலை பார்க்க வரலாம் என பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். #ThaiCave #FIFA
மாஸ்கோ:
தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.
தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். இதனால், அவர்களை முழுவதுமாக மீட்க சில மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 13 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்படுவர் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்காக பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 13 பேரும் விரைவில் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்த பின்னர், அவர்கள் உடல்நிலை ஒத்துழைத்தால் அவர்கள் அனைவரும் ரஷியாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வரலாம் எனவும் கடிதத்தில் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.
இதேபோல, உலகின் பல முன்னணி கால்பந்து கிளப்புகளின் தலைமை நிர்வாகிகளும் தாய்லாந்து மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் குரல்களை தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ThaiCaveRescue #NavyDiverDies
பாங்காக்:
தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.
தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், சிறுவர்கள் இருந்த குகைக்குள் சென்று திரும்பிய தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார்.
தாய்லாந்து கடற்படையின் நீர்மூழ்கி வீரராக பணியாற்றிய சமன் குணன், சிறுவர்களை மீட்கும் பணிக்கு உதவி செய்வதற்காக தானாக முன்வந்து கடற்படையுடன் இணைந்துள்ளார். குகைக்குள் சென்று சிறுவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்த குணன், அங்கிருந்து இன்று அதிகாலை நீருக்குள் மூழ்கி நீந்தியபடி குகையின் மற்றொரு பகுதியில் உள்ள முகாமிற்கு திரும்பினார். ஆனால், வழியிலேயே அவரது ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் குறையத் தொடங்கியது. இதனால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் குணன்.
நீர்மூழ்கி வீரரின் மரணம் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆபத்து நிறைந்த இந்த மீட்புப் பணியில் முதல் உயிரிழப்பு இதுவாகும்.
சிறுவர்களை மீட்பதற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர் குணனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சத்தாஹிப் கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. #ThaiCaveRescue #NavyDiverDies
×

X